மன்னாரில் மேலும் 5 பேருக்கு உறுதியானது கொரோனா!!

மன்னார் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் 27 நபர்களுக்கு முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போது, 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியத் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.

குறித்த 5 பேரூம் வென்னப்புவ பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.நேற்றைய தினம் பட்டிதோட்டம் மன்னார் ஆயர் இல்ல பகுதியில் கட்டிட நிர்மாண வேலைக்கு என வருகை தந்த நபர்கள் குறித்த பகுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களில் 5 பேரூக்கு முதல் கட்டமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட ஏனையவர்களுக்கான முடிவு இதுவரை வெளியாகவில்லை.கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், தற்போது வரை நிலமைகள் கட்டுப்பாட்டுகுள் இருப்பதுடன், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதுடன் காரணம் இன்றி வெளி நடமாட்டத்தை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.