தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவைக்கு விண்ணப்பித்தவர்களிற்கு ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

ஒரு நாள் சேவை முறையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக அழைக்கப்பட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் ஒப்படைக்கும்படி ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

சாதாரண சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளைப் பெற விரும்புவோர் கிராம சேவையாளர்கள் மூலமாகவும் தங்கள் விண்ணப்பங்களை திணைக்களத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உடனடியாக தேசிய அடையாள அட்டைகளை வழங்க சிறப்பு திட்டம் நடந்து வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.ஆட்பதிவு திணைக்களம் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் அனைத்து சேவைகளையும் நிறுத்தவதாக நேற்று அறிவித்தது.அதன்படி, ஒக்டோபர் 12 முதல் 16 வரை சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.