பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனாத் தொற்று..!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த மாணவி கடந்த வாரமே பாணந்துறையிலுள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த மாணவி, மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவரின் உறவினருடன் தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளார்.இந்தக் காரணத்தால் அந்த மாணவிக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, அவர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், அங்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும், கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள பல்கலைக்கழக மாணவி பாணந்துறை மருத்துவமனையின் பிரதான தலைமை தாதியின் மகள் என கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.