பசியில் அழுத பச்சிளம் குழந்தைக்கு பாலில் பூச்சுமருந்து கலந்து கொடுத்த கொடூரத் தாய்!!

மூன்றாவது பிறந்தது பெண் குழந்தையாக பிறந்ததால் அக்குழந்தையை பெற்ற தாயே பாலில் பூச்சுமருந்து கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் விழுப்புரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் நாடு விழுப்புரம் மாவட்டம் பாப்பான்குளத்தை சேர்ந்தவர் சாதிக்பாஷா(32). தனியார் பேருந்து ஓட்டுநரான இவரது மனைவி யாஸ்மின்(29).இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.இருக்கும் சூழ்நிலையில் பெண் குழந்தையை வளர்த்தெடுப்பது கொஞ்சம் கூட முடியாத காரியம் என்று நினைத்த யாஸ்மின், குழந்தையை கொன்றுவிட துணிந்தார்.தானும் ஒரு பெண் என்பதையே மறந்து அச்செயலுக்கு துணிந்தார். ஆனால், எப்படிக் கொல்வது என்றும் மட்டும் முடிவெடுக்கவில்லை.அந்த ஐந்து மாத குழந்தைக்கு வறுமை என்பது தெரியுமா? இரவு பசியில் அழுததும், பாலில் பூச்சுமருந்து கலந்து கொடுத்தார்.பசியால் அழுத குழந்தை பாலை குடித்ததும் அயர்ந்து தூங்கியது. ஆனால், பொழுது விடிந்தும் தூக்கம் கலையவில்லை.தூக்கத்திலேயே மூச்சு முட்டி உயிர் பிரிந்துவிட்டது.இரவு தூங்கிய குழந்தை கண் விழிக்கவே இல்லை என்று குழந்தையை மருத்துமனைக்கு தூக்கி சென்றார் யாஸ்மின்.குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியதும், உறவினர்களோடு யாஸ்மினும் அழுதிருக்கிறார்.

பிரேத பரிசோதனையில் குழந்தையின் உடற்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டத்தில் குழந்தை விசம் கொடுத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.இதைக்கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் உடனே போலீசுக்கு தகவல் சொல்லவும், போலீசார் வந்து விசாரிக்கையில் குழந்தையை விசம் கொடுத்து கொன்றதை ஒப்புக்கொண்டார் யாஸ்மின்.கொடூர மனம் படைத்த யாஸ்மின் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.