அச்சம் வேண்டாம்..பரீட்சைகளை எழுதப்போகும் மாணவர்களின் பெற்றோருக்கு கல்வி அமைச்சு வழங்கியுள்ள உத்தரவாதம்.!!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளை எழுதப்போகும் மாணவர்களின் பெற்றோருக்கு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.


நாளைய தினம் நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை என்பவற்றுக்கான பரீட்சை மத்திய நிலையங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.புலமைப் பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கு நாடு முழுவதும் சுமார் மூவாயிரம் பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.இந்த பரீட்சை நிலையங்கள் அனைத்தும் சுகாதார தரப்பினரால் முழுமையாக கண்காணிக்கப்பட்டு சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், சகல பரீட்சை நிலையங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.பரீட்சார்த்திகளுக்கு இடையில் 2.5 மீற்றர் இடைவெளி பேணும் வகையில் பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.