சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த யாழிலிருந்து கிளிநொச்சி வரை இடம்பெற்ற துவிச்சக்கர வண்டிப் பயணம்.!

பாதுகாப்பான துவிச்சக்கர வண்டிப் பயணத்தை ஊக்குவித்தல்…கடமையை முடித்து துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கிப் பயணம்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தேவையற்ற வீதி விபத்துக்களை தடுக்கவும், சூழல் பாதுகாப்பை மேம்படுத்தவும், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், யாழ்ப்பாணத்தின் பிரபல மருத்துவர்கள் அடங்கியகுழுவினர் பல்வேறு மட்ட பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த பாதுகாப்பான துவிச்சக்கர வண்டிப் பயணம் யாழ் நகரிலிருந்து கிளிநொச்சி நகரம் வரை நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் யாழ் போதனாவைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியின் தலைமையில் யாழ் போதனாவைத்தியசாலையின் முன்றலில் ஆரம்பித்து கிளிநொச்சி வரை இடம்பெற்றது.நேற்று மாலை வேலை நிறைவு பெற்றதும் 4.30 மணிக்கு ஆரம்பித்த சமூகவிழிப்புணர்வுக்கான துவிச்சக்கர வண்டிப் பயணம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு8 மணியளவில் கிளிநொச்சியில் நிறைவுபெற்றது.கொரோனா பரவுவதனை தடுத்தல், போதைப்பொருள் பாவனையை தடுத்தல், வீதிவிபத்துக்களை தடுத்தல், சூழல் மாசுபடுவதனை தடுத்தல், உடல் ஆரோக்கியத்தைபேணல் போன்ற சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கில் மேற்படி துவிச்சக்கர வண்டிப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த துவிச்சக்கர வண்டி பயணம் இயக்கச்சியைவந்தடைந்த போது, கிளிநொச்சி நகர றோட்டரிக் கழக உறுப்பினர்கள், மற்றும்சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இப் பயணத்தில் இணைந்துகொண்டனர்.இப்பயணத்தில் வைத்திய நிபுணர்களான பிரேமகிருஸ்ணா, தவராசா, எழில்வேல்,சிரேஸ்ட விரிவுரையாளர் முருகானந்தன், மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள்மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.