பொறுப்பற்ற வகையில் அலட்சியமாக வெளியில் நடமாடும் பொதுமக்கள்..!! சுகாதாரப் பிரிவு வெளியிட்டுள்ள எச்சரிக்கை..!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், பொது மக்கள் பொறுபற்ற வகையில் செயற்படுவதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்தும் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்காக முகக் கவசம் அணிவது உட்பட உரிய சுகாதார நடைமுறையை கட்டாயம் பின்பற்றுமாறு சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுள்ளது.எனினும், நேற்றைய தினமும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத வகையில் பலர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதை காண முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டை விட்டு வெளியே செல்வதென்றால் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றியவர் இருந்தால், அவரால் இன்னும் ஒருவருக்கு கொரோனா தொற்றாத வகையில் பாதுகாப்பதற்கு முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.ஒவ்வொருவரும் ஒரு மீற்றர் தூர இடைவெளியைப் பின்பற்றுவது அவசியமாகும்.வைரஸிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு கைகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக ஒவ்வாரு முறையும் சவர்க்காரம் அல்லது சென்டைஸர் பயன்படுத்திக் கழுவுமாறு, பொது மக்களிடம் சுகாதார பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.இதற்கு மேலதிகமாக அடிக்கடி கைகளை கண்களில், மூக்கில் அல்லது வாயில் வைப்பதனைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.