மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி ஆன்மா சாந்தியடைய அவரது சகோதரி செய்த நெகழ்ச்சி தரும் செயல்..!!

மறைந்த எஸ்.பி.பி அவர்களின் ஆன்மா சாந்தியடைய அவரது சகோதரி எஸ்.பி.சைலஜா திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார். பின்னணி பாடகரான எஸ்.பி.பி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 25ம் திகதி உயிரிழந்தார்.இவரது மறைவு தமிழ் திரை உலகிற்கு மிக பெரிய இழப்பாகும்.அவரது உடல் கடந்த, 26ல் சென்னை தாமரைப்பாக்கத்தில் அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில் திருவண்ணாமலை கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் சர விளக்கு பகுதியில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆன்மா சாந்தி அடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி அருணாசலேஸ்வரரை வேண்டி பாடல்கள் பாடினர்.இதில், அவரின் சகோதரி எஸ்.பி ஷைலஜா பங்கேற்று விளக்குகள் ஏற்றி பாடல்கள் பாடினார்.நேற்று ஷைலஜாவின் பிறந்தநாள் ஆகும், இதில் அவரின் கணவரான நடிகர் சுபலேகா சுதாகரும் பங்கேற்றார்.மேலும், ஆட்சியர் கந்தசாமி, சினிமா பின்னணி பாடகர்கள் பாடகர்கள் மனோ, அனுராதா ஸ்ரீராம், நடிகர்கள் மயில்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.