மினுவாங்கொட கொரோனா கொத்தணி..நேற்று மட்டும் 35 பேருக்கு தொற்று உறுதி!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாட்டில் நேற்றைய தினம் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் 30 பேருக்கும் , ஊழியர்கள் 3 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு , அவர்களுடன் தொடர்புகளை பேணிய மேலும் 24 பேருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது எனும் கோணத்தில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக அரசாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.