உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளை முன்னிட்டு எடுக்கப்படும் விசேட நடவடிக்கை..!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் ஆகிய பரீட்சைகள் நடைபெறும் பரீட்சை நிலையங்கள் இன்றைய தினம் தொற்று நீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் இந்த தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. பூரண சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளின் அடிப்படையில் பரீட்சை நடத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதேவேளை, கம்பஹா மாவட்டத்திலிருந்து கொழும்பு நோக்கி பரீட்சைக்கு வரும் மாணவ மாணவியருக்காக விசேட பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றும் மாணவ மாணவியருக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.அனைத்து மாணவ மாணவியரும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பரீட்சைக்கு தோற்றுமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.