அரச கடமைக்கான அடையாள அட்டையுடன் ஊர் சுற்றிய ஜோடிக்கு கொரோனா பரிசோதனை!!

அத்தியாவசிய சேவைக்காக பயன்படுத்தலாமென அரசாங்கம் அறிவித்த கடமை அடையாள அட்டையை பாவித்து ஊர் சுற்றிய ஜோடியொன்று பொலிசாரிடம் சிக்கியது. இலங்கை மின்சாரசபையின் கடமை அடையாள அட்டையை பாவித்து இவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஹம்பாந்தோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கெக்கிராவவை சேர்ந்த 32 வயதான இளைஞன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பணிபுரிகிறார். கண்டி, பிலிமத்தலாவயில் வசிக்கும் 20 வயது யுவதியுமே கைதானார்கள்.

அவர்களை ஹம்பாந்தோட்டை நீதிவான் பிணையில் விடுவித்ததையடுத்து, கொரோனா பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எல்லை கடந்தவர்கள் என்ற அடிப்படையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.12ஆம் திகதி தங்காலை வந்து இரவு உணவகமொன்றில் தங்கியிருந்துள்ளனர். நேற்று 13ஆம் திகதி திஸ்ஸ நோக்கி பயணித்தபோது பொலிசாரிடம் சிக்கினர். கைது செய்யப்படுவது வரையான பயணத்தின்போது, கடமை அடையாள அட்டையை அவர்கள் பயன்படுத்தி பிரயாணம் செய்திருந்தது தெரியவந்துள்ளது.