கொரோனா அபாயத்தினால் இழுத்து மூடப்படும் வைத்தியசாலை.!! அவசரமாக வெளியேற்றப்படும் நோயாளர்கள்.!!

நீர்கொழும்பு பழைய சிலாபம் வீதியில் அமைந்துள்ள ஆவே மரியாள் தனியார் (Ave Maria Hospital) வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையின் போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து வைத்தியசாலை மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவினர் வைத்தியசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.நீர்கொழும்பு கட்டுவபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். தொற்று கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து அவர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை வைத்தியசாலை நிர்வாகம் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, நீர்கொழும்பில் இதுவரை ஆறு கொரோனா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.