ஹொரணை மருத்துவமனையில் இரு தாதியர்களுக்கும் கொரோனா தொற்று..!!

ஹொரணை மருத்துவமனையில் சேவையாற்றும் இரண்டு தாதிமாருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக அந்த மருத்துவமனையின் 5 மற்றும் 9 ஆம் விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த இரண்டு தாதியரில் ஒருவரின் கணவர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் சேவையாற்றும் நபர் எனவும் அவருக்கு, அவரது குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என ஹொரணை மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டு தாதியர் உட்பட நால்வரும் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை மற்றும் ஐ.டி.எச் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே வேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ‘நெக்ஸ்ட்’ (NEXT) அப்பரல் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் 38 அகவையைக் கொண்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர் சீதுவை பகுதியை சேர்ந்தவராவர்.ஹெரொன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவருக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.இந்தநிலையில் ஆடைத்தொழிற்சாலையில் பணியார்கள் அனைவருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன.