கொரோனா தொற்றால் ஆண்களுக்கு ஏற்படப் போகும் பேராபத்து..விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

கொரோனா வைரஸ் மூலம் ஆண்களின் விந்தணுக்களின் கரு உற்பத்தியை பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதுடன்,அவர்கள் மலட்டுத்தனமாக மாறக்கூடும் என புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவர்களில் 13 வீதமானவர்களில் விந்தணுக்களில் கொரோனா வைரஸ் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஆய்வுகளை மேற்கொண்ட இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவர் டேன் ஹெடர்கா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக விந்தணுக்களின் அளவு, செறிவு மற்றும் இயக்கம் என்பன 50 வீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றிய ஆண்கள் அடையாளம் காணப்பட்டு 30 நாட்களில் இந்த 50 வீத குறைவு ஏற்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் நோயின் மென்மையான தொற்றுக்கு உள்ளானாலும், இந்த ஆபத்து காணப்படுவதாகவும் மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இறுதியாக இந்த ஆய்வில் உயிரிழந்த கொரோனா நோயாளிகள் 12 பேரின் பிரேதப் பரிசோதனையில் விந்தணு மற்றும் டெஸ்டோஸ்டேரோனை உற்பத்தி செய்யும் விதைகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.