கொரோனாவில் சிக்கித் திணறும் இலங்கை…கொழும்பில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொழும்பு – பொரள்ளை றிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜீ.வி.ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.மினுவங்கொடையை சேர்ந்த குழந்தைக்கு இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது. குழந்தை தற்போது ஐ.டி.எச்மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் மருத்துவமனையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.