கொழும்பில் பிரபல ஒன்றின் மாணவியின் பெற்றோருக்கும் கொரோனா..!!

கொழும்பு சென் பிரிட்ஜெட் கல்லூரி மாணவி ஒருவரின் பெற்றோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பில் கல்லூரி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தமது கல்லூரியின் மாணவியும் அவரின் குடும்பத்தினருடன் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்தும் தமது பாடசாலையில் சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக கல்லூரியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.இதேவேளை, மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களின் நெருங்கிய மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.இதனையடுத்து ஆடைத்தொழிற்சாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய வகையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1044 ஆக உயர்ந்துள்ளது.