வேகக் கட்டுப்பாட்டையிழந்து நடந்த கோர விபத்தால் அந்தரத்தில் தொங்கிய பேருந்து.!! உயிரை உறைய வைத்த விபத்தின் திக் திக் நிமிடங்கள்..!

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பொலிஸார் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசோரியில் கெம்ப்டி நீர்வீழச்சி அருகேயே இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.
இந்தோ-திபெத் எல்லை அருகே பொலிஸார் பயணம் செய்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த 41 வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.பிரேக் பிடிக்காததே விபத்திற்கான காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் கட்டிடத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கும் பேருந்தை பொலிஸார் மீட்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.