நுகர்வோருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.! பருப்பு, டின் மீன் இன்று முதல் மீண்டும் பழைய விலைக்கு.!!

பருப்பு மற்றும் தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன் (டின் மீன்) ஆகியவற்றின் விலையை மீண்டும் பழைய நிலைக்கே மாற்றியமைத்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த மார்ச் முதல் நுகர்வோர் அதிகாரசபை, டின் மீன் (450 கிராம்) மற்றும் பருப்பு (1 கிலோகிராம்) ஆகியவற்றை முறையே ஆகக் கூடிய விலையான 100 ரூபாவுக்கும், 65 ரூபாவுக்கும் விற்பனை செய்யுமாறு பணித்திருந்தது.

எனினும், சதொச நிலையங்களின் ஊடாக விற்பனை செய்யப்படும் டின் மீன் மற்றும் பருப்பு ஆகியவற்றின் ஆகக் கூடிய விலையை நீக்கி கொள்ள கடந்த வாரம் அமைச்சரவை தீர்மானித்தது.இதனையடுத்தே சில்லறை வியாபாரிகள் தாமும் குறித்த இரண்டு பொருட்களின் விலையை பழைய நிலைக்கு மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.முக்கிய அங்காடி ஒன்று இன்று முதல் பருப்பு ஒரு கிலோகிராம் 134 ரூபாவுக்கும், டின்மீன் (450 கிராம்) 192 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.