பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையிலிருந்து தப்பித்து தற்கொலைக்கு முயற்சி..!! காதலன் உட்பட மூவர் பொலிஸாரால் கைது..!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து சென்று கல்லடிப் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் உட்பட 3 பேரை இன்று கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுணதீவு பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி 22 வயதுடைய ஆயித்தியமலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.இந்த நிலையில் சம்பவதினமான கடந்த 4 ம் திகதி இரவு 11 மணியளவில் காதலன், சிறுமியை கையடக்க தொலைபேசி ஊடாக வீட்டில் இருந்து வெளியில் வருமாறு அழைப்பு விடுத்திருந்துள்ளார்.இதனையடுத்து, குறித்த சிறுமி வீட்டின் வெளிப்பகுதில் நின்றிருந்தபோது அங்கு மதுபோதையில் அவளுடைய காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் வந்திருந்ததாகவும் அப்போது சிறுமியை வீதிக்கு வருமாறு அழைத்தபோது சிறுமி வரமுடியாது என தெரிவித்த நிலையில் காதலனின் நண்பர்கள் இருவர், சிறுமியின் வாயை பொத்தி அவரை வீட்டின் வேலிப்பகுதியில் இருந்து தூக்கி கொண்டு அருகிலுள்ள காட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.இந்த நிலையில், சிறுமியின் காதலன் சிறுமியை முதலில் பாலியல் பலாத்தாரம் செய்ததுடன், அவரின் நண்பன் ஒருவன் சிறுமியை பலாத்தகாரம் செய்ய முற்பட்டபோது, சிறுமி அவனின் கையை வாயால் கடித்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு தப்பி ஓடியுள்ளார்.இதன் பின்னர் 05ஆம் திகதி திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட் சிறுமியின் உறவினர்கள் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், சிறுமியின் காதலன் மற்றும் நண்பர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 06ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து தப்பி மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேல் இருந்து ஆற்றில் குதித்து நீந்திய போது அங்கு கடமையில் இருந்து இராணுவத்தினர் உடனடியாக செயற்பட்டு அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.இதேவேளை தலைமறைவாகி வந்த சிறுமியின் காதலன் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவர் உட்பட 3 பேரை இன்று கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.