ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கு கொரோனா!!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் 10 பேர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார். இதையடுத்து குறித்த தொழிற்சாலை மூலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.இந்தநிலையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புபட்டவர்கள் என 1044 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

சிலாபம், அம்பகதவில பி​ரதேசத்தில் நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இன்று (08) உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த நபர் வேறு ஒரு நோய்க் காரணமாக​வே நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சிலாபம் வைத்திசயாலைக்கு சென்றிருந்தாகவும், அதன்போது நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உள்ளதென உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனையடுத்து அவரது வீட்டிலிருந்த குறித்த நபரை உடனடியாக வைத்திசாலை அம்யூலன்ஸ் வண்டியொன்றில் ஏற்றி இரணவில கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்திருந்தாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அதனைடுத்து, இவர் தொடர்பாக தேடியறிந்துள்ள சுகாதார அதிகாரிகள், அம்பகதவில பி​ரதேசத்திலுள்ள தேவாலயம் ஒன்றின் இரு பாதிரியார்கள் உள்ளடங்களால் அந்த பிரதேசத்திலுள்ள ஐந்து குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.