நடுவானில் பிறந்த குழந்தை!! வாழ்நாள் முழுவதும் அடித்த அதிர்ஷ்டம்..!

இந்தியாவில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் விமானத்திலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளதால் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச டிக்கெட்டை பரிசளித்துள்ளது இன்டிகோ நிறுவனம். இன்டிகோ 6 இ 122 விமானத்தில் பெங்களூருவில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் டெல்லி செல்லும்போது திடீரென ஆண் குழந்தையை பிரசவித்தார்.விமான ஊழியர்கள் குழந்தையை கைகளில் வைத்திருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வந்த நிலையில், வாழ்நாள் முழுவதும் இலவச டிக்கெட்டை பரிசளித்துள்ளது இன்டிகோ நிறுவனம்.குழந்தையை விமானத்தில் பாதுகாப்பாக பிரசவிக்க உதவியதாக இன்டிகோ விமான ஊழியர்கள் குழுவுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.