மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்களுக்குப் பூட்டு..!!

மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்கள் மற்றும் கள்ளுத் தவறணைகளை மூடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கலால்வரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆரியதாச போதரகம தெரிவித்தார்.எனினும், மதுபானசாலைகளை மூடுவது தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்புப்பிரிவு வழங்கும் ஆலோசனைக்கு அமைவாக இது குறித்த இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.