பொலிஸாரையும் விட்டுவைக்காத கொரோனா!! இழுத்து மூடப்பட்ட மினுவாங்கொட பொலிஸ் நிலையம்.!!

மினுவாங்கொட பொலிஸ் நிலைய சிற்றுண்டிசாலை உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவருடைய மகன் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

சிற்றுண்டிசாலை உரிமையாளர் தொற்றுக்குள்ளான நிலையில் பொலிஸ் நிலையத்தில் உள்ள சகல பொலிஸாரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் தொற்றுக்குள்ளான சிற்றுண்டிசாலை உரிமையாளரின் மகன் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.