கொழும்பில் தப்பியோடிய கொரோனா சந்தேக நபர்.!! ஒரு பகுதி முற்றாக முடக்கம்

கொழும்பில் தப்பியோடி கொரோனா சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்ற நோயாளியினால் குணசிங்கபுர முஹந்திரம் ஒழுங்கை சற்று முன்னர் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தப்பி வந்து இந்தப் பகுதியில் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.அந்தப் பகுதியில் குறித்த நபருடன் பழகியிருந்த இருவர் இந்தப் பகுதியில் இருந்து சுகாதார பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.இதனையடுத்து குறித்த பகுதிக்குள் எவரும் உள்நுழையவோ வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.