மிகச் சவாலாக மாறப் போகும் அடுத்து வரும் ஏழு நாட்கள்..!! நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு.!

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமானது மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் எதிர்வரும் ஏழு நாட்கள் மிகவும் சவாலான நாட்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதன் நிமித்தம் எதிர்வரும் ஏழு நாட்கள் சவாலானவை.எனவே, இந்த ஏழு நாட்களும் நாட்டின் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுவது அவசியமாகும். அத்துடன் சுகாதார வழிமுறைகளையும் தவறாது பின்பற்றி தத்தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இலங்கை முழுவதும் வைரஸ் ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.