கொழும்பு மகளிர் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கொரோனாத் தொற்று!

கொழும்பு, காசல் வீதி மகளிர் மகப்பேற்று மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண், சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், மினுவாங்கொட கொரோனா தொற்று பரவலுக்கும் இந்தப் பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.