யாழில் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்! உண்மை நிலவரம் இதுதான்..!

கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.

இதேவேனை இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை. இலங்கையில் தற்போதுவரை 113 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்றைய தினம் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனலை தீவில் இருந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு பரிசோனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.