கம்பஹாவில் சடுதியாக அதிகரித்துச் செல்லும் கொரோனா.!! சற்று முன் வெளிவந்த மிகப் பிந்திய நிலவரம்..!!

நாட்டில் மேலும் ஆறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில்,மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது.கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான பெண்ணைத் தொடர்ந்து நாட்டில் பல நூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.இந்நிலையில், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் தந்தையொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.