புத்தாண்டு தினத்தில் நடந்த கொடூரம்! வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளைஞன்..!!

கெப்பற்றிப்பொலாவ பகுதியில் நேற்றைய தினம் இரவு ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புத்தாண்டு தினமான நேற்று இரவு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றின் போதே ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது சகோதரனான அண்ணன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; புத்தண்டு தினமான நேற்று மாலை அனுராதபுரம், கெப்பற்றிபொலவா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மது விருந்து கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அதிக சத்தம் காரணமாக அயல் வீட்டுக்காரர் மது விருந்தில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்குமாறு கோரியுள்ளார்.இதன்போது ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் அயல் வீட்டைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெ.செலிட்டர் என்பவர் வாள்வெட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், கைகலப்கை தடுக்கச் சென்ற அவரின் அண்ணனான 34 வயதுடைய ஜெ.விஜயசுந்தரம் என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த கைகலப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு, கெப்பற்றிபொலவ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.