உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கியமான அறிவிப்பு..!!

க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன ஏலவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் தலைத்தூக்கியுள்ள நிலையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஒரு பரீட்சார்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு தனியாக ஒரு பரீட்சை மண்டபம் தயார் செய்து பரீட்சை எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.மேலும், இன்று மாலை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் விண்ணப்பத்தை பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.