முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு.!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அன்றாடம் தங்களது தொழில் வாய்ப்புக்களை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை வழங்கும் சாரதிகளுக்கும் இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.எனவே கொடுப்பனவைப் பெற தகுதியுள்ள நபர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.