வரக்காபொல பகுதிக்கும் பரவியது கொரோனா..!!

வரக்காபொல பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணி தொற்றுடன் தொடர்புடைய ஒருவரே அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளார். குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 374 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தனர்.ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 74 இலங்கையர்களும் ,மாலைத்தீவில் இருந்து 10 பேரும் ,தென் கொரியாவில் 285 பேருமே இவ்வாறு நாட்டை வந்தடைந்தனர்.இந்நிலையைில், நாட்டிற்கு வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2