யாழ் புங்குடுதீவுப் பிரதேசம் முழுமையாக முடக்கம்..!! அரச அதிபர் அறிவிப்பு..

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பிரதேசம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.யாழ். செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கும் போது;

எங்களைப் பொறுத்தவரைக்கும் புங்குடுதீவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்து 212 குடும்பங்களைச் சேர்ந்த 3915 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்த லுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அந்த பகுதியில் முழுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.கம்பகா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் என்ற அடிப்படையில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள். அதில் இருவர் புங்குடுதீவை சேர்ந்தவர்கள். இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.கடந்த 30ஆம் திகதி மற்றும் மூன்றாம் திகதி இரண்டு பேர் இங்கு வந்திருக்கிறார்கள் அவர்களில் 3 ஆம் திகதி வந்தவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் அவருடைய நெருங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் புங்குடுதீவு பகுதியில் அதாவது கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.அதேவேளையில் வேலணை பிரதேச செயலர் பிரிவில் 57 பேர் போக்குவரத்தில் மற்றும் ஏனைய இடங்களில் அந்த பெண்ணுடன் தொடர்புபட்டனர் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.