உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா நீர்கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம்..!!

உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சற்று முன்னர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதற்கமைய, கம்பஹா, கிரிந்திவெவல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வத்துஹிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல, யக்கல, ஜாஎல மற்றும் கந்தான ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.மினுவாங்கொட தொழிற்சாலையில் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நீர்கொழும்பு வளையத்திற்கு உட்பட திவுலுப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஊரடங்கு சட்டவிதிகளுக்கு அமைவாக அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.