தனது மனைவி மற்றும் 3 வயதுக் குழந்தையை கொடூரமாக கொலை செய்த தந்தை தற்கொலை..லண்டனில் நடந்த பயங்கரம்..!!

சற்று முன்னர் லண்டன் பிரன்பேட்டில், வைத்து கணவர் ஒருவர் தன் மனைவி மற்றும் பிள்ளை ஒருவரை வீட்டில் வைத்துக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில், மேலும் ஒரு துயரச் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். கணவர் மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.சிவராஜ் என்னும் 40 வயது நபர் தனது மனைவி, காமேஷ்வரியை மற்றும் 3 வயது மகனை கொலை செய்து விட்டு, தன்னையும் தாக்கியுள்ளார். இவர்கள் மூவரும் இறந்து விட்டதாக மெற்றோ பொலிடன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.லண்டன் பிரன் பேட்டை சேர்ந்த கிளே-பான்ட் வீதியில் வசித்து வந்தார்கள். இவர்கள் மலேசிய தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.இன்று காலை பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் அங்கே சென்றவேளை. மூவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.