கம்பஹாவை அடுத்து கொழும்பிலும் கொரோனா?? மினுவாங்கொட கொரோனா நோயாளியுடன் தொடர்பு.? கொழும்பு மாநகர சபையின் ஊழியர்களுக்கு PCR பரிசோதனை?

கொழும்பு மாநகர சபையின் ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக சபையின் கட்டுப்பாட்டாளர் தீர்மானித்துள்ளார்.மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊழியரின் தாயார் மினுவாங்க பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் என நகர சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.கொழும்பு நகர சபையின் திட்ட பிரிவு ஊழியராக பணியாற்றும் நபர், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கமைய திட்ட பிரிவின் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஏனைய பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக நகர சபையின்ன பிரதான வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.மினுவாங்கொட பகுதியிலுள்ள தொழிற்சாலையில் பெருமளவானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியை கொரோனா கொத்தணி என தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.