இன்று தொடக்கம் முற்றாக நிறுத்தப்படும் தீவகப் பகுதிகளுக்கான படகுச் சேவை..!!

புங்குடுதீவு – குறிகட்டுவான் ஊடாக தீவுப் பகுதிகளுக்கான படகு சேவைகள் இன்று தொடக்கம் முற்றாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. புங்குடுதீவு ஊடான பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவருவர் வீடு திரும்பிய நிலையில் அவர்களுடன் தொடர்புடையோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.அவர்களில் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தப் பெண் புங்குடுதீவுக்குப் பயணித்த பேருந்தில் பயணித்த ஏனையோரை அடையாளம் காணும் நடவடிக்கைகளை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துள்ளனர்.அதனால், புங்குடுதீவு ஊடாக குறிகாட்டுவானுக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதனால், மறு அறிவித்தல் நெடுந்தீவு மற்றும் நயினாதீவிலிருந்து குறிகாட்டுவானுக்கான படகுச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.