ஆபத்தாக மாறும் கம்பஹா! மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று

மினுவாங்கொட தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர் பணியாற்றிய தொழிற்சாலையிலுள்ளவர்களுக்கும் பீஆர்சி பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவாங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 220 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.அதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்களின் எண்ணிக்கை 323 என உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று காலை இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது இராணுவ தளபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.இந்த தொழிற்சாலையில் 1400 பேர் பணியாற்றி வரும் நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 323 பேர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.