புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு கொரோனா!

யாழில் பரிசோதனைக்கு உட்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா பணிப்பாளர் உறுதி செய்துள்ளார். மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறையில் வந்த இரண்டு யுவதிகளில் ஒருவரே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.நேற்று அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இது தெரிய வந்துள்ளது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 39 வயதுடைய குடும்பப் பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து தற்போதுவரை 74 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.