யாழில் அடையாளம் காணப்பட்ட பெண் கொரோனா நோயாளி தொடர்பில் வெளியான தகவல்.!!

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அடையாளம் காணப்பட்ட பெண் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வீடு திரும்பிய பயண ஒழுங்குகளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.குறித்த பெண் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து புங்குடுதீவுக்கும் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.இவர் பயணித்த பேருந்தில் பயணித்தவர்கள் உடனடியாக 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவிப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் -பேருந்து – Ran Silu –

பதிவு இல – WP ND 6500- கொழும்பிலிருந்து புறப்பட்டநேரம் -03/10/2020 8.30pm

யாழ். பேருந்து நிலையம் – 04/10/2020 5Am,யாழ்ப்பாணம்-புங்குடுதீவ, பேருந்து – Matha

பதிவு இல – NP ND 8790, புங்குடுதீவு புறப்பட்டநேரம் – 04/10 /2020 5 Am- சென்றடைந்த நேரம் -04/10 /2020 7AM