ஊரடங்கு உத்தரவு குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலித் தகவல்!! ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு.!

கொழும்பில் அல்லது நாடளாவிய ரீதியில் உடனடியாக ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்படும் தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லையென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


மேலும், இவ்வாறு சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தியை நம்ப வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதேவேளை, நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து நாட்டு மக்களிடத்திலேயே ஒரு அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.