இலங்கை வாழ் மக்களுக்கு சற்று முன்னர் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை..எந்த வேளையிலும் ஊரடங்கு அமுலாகும் சாத்தியம்.!!

நாட்டின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

எனவே சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு சற்றுமுன்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் மேலும் 69 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.