மூன்றாவது தடவையாகவும் கொரோனா தொற்றுக்குள்ளாகிய இலங்கை இளைஞன்..!!

இலங்கையில் மூன்றாவது முறையாகவும் கொரோனா தொற்றுக்கு உள்ளான இளைஞன் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனமடுவ, தென்னன்குரிய பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞன் மூன்றாவது முறையாகவும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் எம்.பரிட் தெரிவித்துள்ளார்.குறித்த இளைஞன் கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இதனையடுத்து வெலிகந்த கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டார்.வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய இளைஞன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.தனது தாயுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது இரண்டாவது முறையாக கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட பின்னர் கடந்த செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதற்கமைய இரணவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் மீண்டும் குணமடைந்து வீடு திரும்பியிருந்தார். குறித்த இளைஞனை உரிய தனிமைப்படுத்தல் முறையின் கீழ் அவரது வீட்டில் தனிமைப்படுத்த ஆனமடு சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவகம் நடவடிக்கை மேற்கொண்டது.எப்படியிருப்பினும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி தனிமைப்படுத்தலில் இருந்த இளைஞன் மீண்டும் சுகயீனமைடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் மூன்றாவது முறையாகவும் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கையில் மூன்றாவது முறையாகவும் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட முதல் நோயாளி இந்த இளைஞன் என்பது குறிப்பிடத்தக்கது.