நாட்டிலுள்ள அனைத்து தனியார் அரச பேருந்து சேவைகளுக்கும் உடன் அமுலாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு!

நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரச பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறே பயணிகள் செல்வது உடன் அமுலுக்குவரும் வகையில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மினுவாங்கொடவில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவர் இனம் காணப்பட்ட நிலையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் காலவரையின்றிய ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள சிறைச்சாலைகளுக்கும் பார்வையிடச் செல்லவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகள் முகக்கவசம் அணிதல் முக்கியமானது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான நிலைமை காரணமாக பாதகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.