7 யாழ்ப் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் !

கம்பஹா மாவட்டத்தில் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றிய 400 பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பணியாளர்களின் பெயர் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அனுப்பிவைக்கப்பட்ட குறித்த பெயர் விபரங்களுக்குள் யாழ்.புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரு பெண்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கவில்லை என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த புங்குடுதீவுப் பெண்கள் கம்பஹா மாவட்டத்திலுள்ள வேறு ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல், சமூக பாதுகாப்பு கருதி தொடரும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணியாற்றிய ஆடைத் தொழிற்சாலையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 7 பெண்கள் கம்பகா மாவட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.