சமூக மட்டத்தில் மேலுமொரு நோயாளி.!! இலங்கையில் வேகமாகப் பரவும் கொரோனா..!

திவுலப்பிட்டிய பகுதியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று உறுதியானவர் 16 வயதுடைய சிறுமி என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.மேலும், இந்த பெண்ணின் கணவர் உட்பட 4 பிள்ளைகள் மற்றும் தந்தை ஆகியோர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.எனினும், குடும்பத்தில் ஏனைய ஐவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என பீ.சீ.ஆர் பரிசோதனையில் உறுதியாகியுள்ளதென ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றுக்குள்ளான 16 வயதுடைய மகனை கொழும்பு IDH வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பீ.சீ.ஆர் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.கம்பஹாவில் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.இந்நிலையில்,திவுலப்பிட்டிய பகுதியில் 180 பேர் மற்றும் மினுவங்கொட பகுதியை சேர்ந்த 250 பேர் உள்ளடங்களாக 430 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து மினுவங்கொட மற்றும் திவுலபிடிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.