பாடசாலை மாணவர்களுக்கு மிக முக்கிய அவசர அறிவிப்பு…நாடாளவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் பூட்டு.!!

இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை முதல் இரண்டாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சற்று முன்னர் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த தகவலை அறிவித்துள்ளார்.

முன்னதாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.அந்தப் பகுதியிலுள்ள பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் அனைத்தையும் உடனடியாக மூடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகளை மூடி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கம்பஹாவில் இன்று காலை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.