மீண்டும் கொரோனா! இலங்கையின் ஒரு பகுதிக்கு மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு..!!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய, மினுவாங்கொட பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

திவுலப்பட்டிய பகுதியில் பெண்ணொருவர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்தே குறித்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் காய்ச்சல் காரணமாக கம்பஹா வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பும் போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.அதற்கமைய கம்பஹா வைத்தியசாலை ஊழியர்கள் 15 பேர் மற்றும் அந்த பெண் பணியாற்றிய தனியார் நிறுவன ஊழியர்கள் 40 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியமை தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.