யாருமற்ற நேரத்தில் யாழ் கடற்பரப்பில் படகை எடுத்துக் கொண்டு ஆழ்கடலுக்கு சென்ற 16 வயதுச் சிறுவன்.!! வடமராட்சிக் கடலில் நடந்தது என்ன?

யாழ்.மயிலிட்டி துறைமுகத்திலிருந்து படகு ஒன்றை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்ற 16வயது சிறுவன் பருத்துறை- ஊறணிக் கடற்பகுதியில் வைத்து கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளதுடன்,படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மயிலிட்டி துறைமுகத்திலிருந்து நேற்று மாலை குறித்த சிறுவன் படகு ஒன்றை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்றிருக்கின்றார். இந்நிலையில் சிறுவனையும், படகையும் தேடிவந்த நிலையில், பருத்துறை ஊறணி கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளதுடன், படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட சிறுவன்காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிறுவனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.