அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மனைவிக்கு கொரோனா தொற்று.!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவ்விடயத்தை தனது ட்விற்றர் கணக்கில் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்நெருங்கிய உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ட்ரம்பிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (30) நடந்த பிரச்சார பேரணியின்போது, ட்ரம்புடன் ஹோப் ஹிக்சும் சென்றிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த ஜனாதிபதி ட்ரம்ப், தானும் தனிமைப்படுத்திக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன. அதில், இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடயத்தை தனது ட்விற்றர் கணக்கில் வெளியிட்டுள்ள அவர், உடனடியாக தனிமைப்படுத்தும் நடைமுறை மற்றும் சிகிச்சையை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.